மனநோய் என்பது நம்முடைய எண்ணம்(Cognition), நடத்தை(Behavior) மற்றும் உணர்ச்சிகளில்(Emotions) ஏற்படும் மாற்றங்களும், பாதிப்புகளும் மனநோய் ஆகும். இப்பாதிப்புகள் சில நாட்களோ அல்லது பல நாட்களோ தொடரலாம்.
மனநோய்க்கான காரணங்கள்:
✓ மரபணுக்கள் (Genetic)- மனநோய் என்பது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணு மூலமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.
✓சுற்றுச்சூழல் (Environment)- மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழ்வதால் மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
✓ மூளை வேதியியல் (Brain Chemistry)- மூளையில் சுரக்கக்கூடிய இரசாயனங்களின் ஏற்றத்தாழ்வு மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓ போதைப் பொருட்கள் (Substance Abuse)-மது அருந்துவது அல்லது மற்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவது மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்(Traumatic Events)-நேசிப்பவரை இழப்பது அல்லது கார் விபத்தில் சிக்குவது போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓ மூளை தொற்று அல்லது காயம்(Brain Infection or injury)-மூளையில் ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகள் மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓ உடல்நலக்குறைவு (Physical illness)-தீவிர உடல்நலக் குறைவு நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும்.
✓ஆரோக்கியமற்ற பழக்கங்கள்(unhealthy habits)- போதுமான அளவு தூங்காமல் இருப்பது,தனிமையில் வாழ்வது மற்றும் யாரிடமும் வெளிப்படையாக பேசாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓எதிர்மறை எண்ணங்கள்(Negative thoughts)-தாழ்வு மனப்பான்மை மற்றும் தவறான எதிர்பார்ப்புகள் உங்களுக்கு பதட்டத்தையும், சோகத்தையும் உண்டாக்கக் கூடும்
பொதுவான அறிகுறிகள்:
✓ தூக்கமின்மை மற்றும் பசியின்மை.(Sleeplessness and loss of appetite)
✓ உணர்ச்சிகளில் விரைவான அல்லது வியக்கத்தகு மாற்றங்கள்.(Mood Swings)
✓ சமுதாயத்தில் இருந்து விலகிச்செல்வது மற்றும் ஆர்வமின்மை (Social withdrawal and interest-less)
✓ அமைதியின்மை மற்றும் அலைந்து திரியும் போக்கு( Restlessness and Wandering tendency)
✓ சுகாதாரமற்ற நிலை (Poor personal hygiene)
✓ வழக்கத்தை விட நீண்ட நேரம் நீடிக்கும் சோகம் அல்லது வெறித்தனம்.(Unusual depression and Anger)
✓ தெளிவற்ற பேச்சு மற்றும் அர்த்தம் அல்லது பொருள் இல்லாத பேச்சு (Irrelevant and disorganized speech).
✓ தனிமை (loneliness)
✓ தற்கொலை எண்ணம் (suicide thoughts)
தீவிர அறிகுறிகள்:
✓ அதிகப்படியான சந்தேகம் (Suspected thoughts)
✓ தனியாக பேசுவது மற்றும் சிரிப்பது (self talk and self smile)
✓ காதில் மாயக்குரல் கேட்பது (Auditory hallucination)
✓கண்களில் மாய உருவம் தெரிவது (Visual hallucinations)
✓ உடம்பின் மேல் பூச்சி,பூரான் ஊருவது போல் நினைப்பது (Tactile hallucination)
✓எனக்கு துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவது (Olfactory hallucination)
✓ ஏதோ வாயில் சுவை இருந்து கொண்டே இருக்கிறது என்று நினைப்பது (Gustatory Hallucination)
✓தன்னை யாரோ பின் தொடர்வதாக மற்றும் என்னை பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று நினைப்பது (Delusion of reference)
✓ அனைவரும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று நினைப்பது (Delusion of persecution)
✓நான் கடவுள் என்று கூறுவது (Delusion of grandiose)
✓ எனக்குள் கடவுள் இருக்கிறார் என்று கூறுவது (Delusion of possession by god)
✓ தன்னிச்சையான பேச்சு (Spontaneous speech)
✓ என்னைப்பற்றி டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்கள் என்று கூறுவது (Delusion of thought broadcasting)
✓ என்னை யாரோ கட்டுப்படுத்துகிறார்கள் என்று நினைப்பது (Delusion of control)
✓ என் உடல் உறுப்புகள் அழுகிவிட்டது அல்லது இல்லை என்று கூறுவது (Cotard delusion)
✓ அதிகப்படியான பயம் மற்றும் பதட்டம் ( Irrational fear and anxiety)
சிகிச்சைகள்:
✓ மருந்தியல் சிகிச்சை(Pharmacological treatment)
✓ மனநல ஆலோசனைகள் (Psychological counseling)
✓ உளவியல் சிகிச்சை (Psychotherapy)
✓ யோகா மற்றும் தியானம் (Yoga and Meditation)
✓ மின் அதிர்வு சிகிச்சை (Electro-convulsive therapy)
மன நோய்க்கான சிகிச்சைகள் பெரும்பாலும் நோயின் தன்மையைப் பொறுத்தே அமையும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்கள் குடும்பத்தினருக்கு இருந்தால் அவரை அருகில் உள்ள மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். ஏனெனில் மனநோய் சிறியதாக இருக்கும்போதே அதனை சரி செய்து விட வேண்டும் இல்லையென்றால் அது நாள்பட்ட நோயாக மாறி அதனை சரிசெய்ய மிகவும் கடினமாகிவிடும்.So plz Consult a psychiatrist in case whose symptoms are present.
நன்றி.🖤
Iniyan Tharmaraj B.B.A.,MSW(MPSW)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக