✓மனநிலை கோளாறு [Mood Disorder]:
மனநிலைக் கோளாறு என்பது ஒரு மனநலப் பிரச்சினையாகும், இது முதன்மையாக ஒரு நபரின் உணர்ச்சி நிலையை பாதிக்கிறது(Emotions). இந்நோயானது ஒரு நபர் நீண்ட கால அதீத மகிழ்ச்சி, அதீத சோகம் அல்லது இரண்டையும் அனுபவிக்கும் ஒரு கோளாறு ஆகும்.சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவரின் மனநிலை மாறுவது இயல்பானது ஆனால் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் பல வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருக்குமேயானால் அவை மனநிலை கோளாறாக(Mood Disorder) இருக்க வாய்ப்பு உண்டு.
எ.கா:
# இருமுனை மனநிலை கோளாறு(Bipolar Mood Disorder)
# மனச்சோர்வு நோய் (Depression)
# மன எழுச்சி நோய் ( Mania)
✓ மனப்பதற்ற நோய்[Anxiety Disorder]:
ஒருவருக்கு பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு சூழ்நிலையில் உடலும்,மூளையும் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினையை ஏற்படுத்தும் அதுவே மனப்பதற்றம் ஆகும்.மனதில் சிறிதளவு பயம் கலந்த பதற்றம் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நோயாக மாறிவிடுகிறது.இந்தியாவில் புள்ளி விவரங்களின்படி 5 முதல் 7 சதவிகிதம் பேருக்கு மனப் பதற்றம் இருக்கிறது.
எ.கா:
# சமூக பதற்றக் கோளாறு(Social Anxiety)
# பயநோய்(Phobia)
# பீதி நோய்(Panic Disorder)
# பொதுவான பதற்றக் கோளாறு(Generalized anxiety disorder)
✓மனநோய் கோளாறு[Psychotic Disorder]:
மனநோய் என்பது மனதைப் பாதிக்கும் தீவிர நோய்களின் ஒரு குழுவாகும். இந்நோயானது ஒருவருக்கு தெளிவாகச் சிந்திபதிலும், நல்ல முடிவுகளை எடுப்பதிலும்,உணர்ச்சிப்பூர்வமாக பதிலளிப்பதிலும், திறம்பட தொடர்பு கொள்வதிலும்,யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதிலும், சரியான முறையில் நடந்துகொள்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எ.கா:
# மனச்சிதைவு நோய் (schizophrenia)
# ஸ்கிசோ பாதிப்பு நோய்(Schizo -affective disorder)
# மருட்சி கோளாறு(Delusional Disorder)
✓ உண்ணுதல் கோளாறு [Eating Disorder]:
இந்நோயானது உணவு உண்ணுதல் அல்லது உண்ணுதல் தொடர்பான நடத்தையின் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் அல்லது இடையூறுகளால் வகை படுத்தப்படுகிறது.இவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்கும் உளவியல் நிலைகளின் வரம்பாகும். இதன் விளைவாக உணவு உட்கொள்ளல் அல்லது அருந்துவதில் மாற்றம் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் அல்லது உளவியல் செயல்பாடுகள் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
எ.கா:
# பசியற்ற உளநோய்(Anorexia nervosa)
# புலிமியா உளநோய்(Bulimia nervosa)
# மிதமிஞ்சி உண்ணும் நோய்(Binge eating disorder)
✓ சோமாடிக் கோளாறு தொடர்பான நோய்கள் [somatic related disorder]:
சோமாடிக் நோய் என்பது தனக்கு இல்லாத ஒரு உடல் ரீதியான பிணியை இருப்பதாக நினைத்து வருந்துவது ஆகும். இந்நோயானது பதற்ற நோயுடன் தொடர்புடையது. மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வலியை சார்ந்தோ, நரம்பு கோளாறுகளை சார்ந்தோ,பாலியல் பிரச்சினைகளை சார்ந்தோ அல்லது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சார்ந்தோ காணப்படும்.
எ.கா:
# நோய் கவலைக் கோளாறு(Illness anxiety disorder)
# மாற்றுக் கோளாறு(Conversion disorder)
✓ ஆளுமை கோளாறு[Personality Disorder]:
ஆளுமைக் கோளாறுகள் மனநல நிலைமைகளின் ஒரு குழுவாகும், அவை வளைந்துகொடுக்காத மற்றும் வித்தியாசமான சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.இந்த உள் அனுபவங்கள் மற்றும் நடத்தைகள் பெரும்பாலும் ஒருவர் வாழும் கலாச்சாரத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றது.உங்களுக்கு ஆளுமை கோளாறு இருந்தால், மற்றவர்களுடன் பேசுவதிலும், பழகுவதிலும் சிரமம் ஏற்படலாம். ஆளுமை கோளாறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
எ.கா:
Cluster A: suspicious
1) சித்தப்பிரமை ஆளுமை கோளாறு(Paranoid personality disorder)
2) ஸ்கிசாய்டு ஆளுமை கோளாறு(Schizoid personality disorder)
3) ஸ்கிசோடிபால் ஆளுமை கோளாறு(Schizotypal personality disorder)
Cluster B: Emotional & Impulsive
4) சமூக விரோத ஆளுமைக் கோளாறு(Antisocial personality disorder)
5) விளிம்புநிலை ஆளுமை கோளாறு ( Borderline personality disorder)
6) நடிப்புத் திறன் ஆளுமை கோளாறு(Histrionic personality disorder)
7) நாசீசிஸ ஆளுமை கோளாறு (Narcissistic personality disorder)
Cluster C: Anxious
8) தவிர்க்கும் ஆளுமை கோளாறு(Avoidant personality disorder)
9) சார்பு ஆளுமை கோளாறு (Dependent personality Disorder)
10) அப்செஸிவ்-கம்பல்சிவ் ஆளுமைக் கோளாறு (Obsessive compulsive personality Disorder)
✓ உணர்ச்சி வேக கட்டுப்பாடு மற்றும் அடிமையாதல் சம்மந்தப்பட்ட மனநோய் [Impulse control and addiction related Disorder]:
உணர்ச்சி வேகக்கட்டுப்பாட்டு கோளாறு என்பது ஒரு நபருக்கு உணர்ச்சிகள் அல்லது நடத்தைகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சிக்கலான நிலை ஆகும். உதாரணமாக திருடுவது,சூதாடுவது மற்றும் மற்ற நபர்களிடம் கோபம் கொள்வது போன்ற பழக்கங்களை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அதனை செய்வது.
எ.கா:
# க்ளெப்டோமேனியா (Kleptomania)
# பைரோமேனியா(Pyromania)
# போதைக்கு அடிமையாதல் (Addiction to Drugs)
✓ தூக்கக் கோளாறு [Sleeping Disorder]:
தூக்கக் கோளாறு என்பது ஒரு வழக்கமான அடிப்படையில் அல்லது நன்றாக தூங்கும் திறனை பாதிக்கும் ஒரு நோயாகும். தூக்கத்தில் ஏற்படும் கோளாறுகள் நம் உடல்நல குறைவடையும், அதிகப்படியான மன அழுத்தத்தையும் கொடுக்கும்.
எ.கா:
# தூக்கமின்மை (Insomnia)
# பராசோம்னியாஸ்(Parasomnias)
# நார்கோலெப்ஸி(Narcolepsy)
✓ நரம்பியல் வளர்ச்சி திறன் குறைபாடு[Neuro Developmental Disorder]:
நரம்பியல் வளர்ச்சி திறன் குறைபாடு என்பது மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் கோளாறுகளின் ஒரு குழுவாகும், இந்நோய் ஆனது மூளையின் செயல்பாடு,உணர்ச்சி, கற்றல்திறன், சுயகட்டுப்பாடு மற்றும் நினைவாற்றல் போன்றவற்றில் குறைபாடுகளை ஏற்படுத்தும். நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளின் விளைவுகள் ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
எ.கா:
# கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (Attention deficit hyperactivity disorder)
# கற்றல் குறைபாடு ( learning Disability)
# அறிவுசார் குறைபாடுகள்(Intellectual disabilities)
அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் தொடர்பான கோளாறுகள் என்பது குழந்தை பருவத்தில் நாம் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படக்கூடிய உணர்ச்சி மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சனைகளின் ஒரு குழுவாகும்.பெரும்பாலும் குடும்ப மோதல்கள், பெற்றோர்களால் கைவிடப்படுவது,உடல் ரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியான வன்கொடுமைகள் போன்ற சம்பவங்களே இந்நோய் வருவதற்கு காரணமாகிறது.
எ.கா:
# அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தக் குறைபாடு (Post-traumatic stress disorder)
# கடுமையான மன அழுத்தக் கோளாறு(Acute stress disorder)
# எதிர்வினை இணைப்பு கோளாறு(Reactive attachment disorder)
✓ அப்செசிவ்-கம்பல்சிவ் தொடர்பான கோளாறு [Obsessive-Compulsive Related Disorder]:
அப்செசிவ்-கம்பல்சிவ் தொடர்பான கோளாறு என்பது ஒரு மனநோயாகும்.இது மீண்டும் மீண்டும் தேவையற்ற எண்ணங்கள் அல்லது உணர்வுகளை (Obsession) அல்லது மீண்டும் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை (Compulsive) ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு விஷயத்தை தொடர்ந்து சரி பார்த்துக் கொண்டே இருப்பது மற்றும் திரும்பத் திரும்ப ஒரே செயலை செய்வதுமாக இருப்பார்கள்.
எ.கா:
# அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு (obsessive compulsive disorder)
# உடல் டிஸ்மார்பிக் கோளாறு (Body dysmorphic disorder)
# டிரிகோட்டிலோமேனியா
(trichotillomania)
இதர மனநோயின் வகைகள்:
✓ விலகல் நோய்( Dissociative disorder)
✓ நீக்குதல் கோளாறு (Elimination Disorder)
✓ பாலியல் தொடர்பான மனநோய்.
(Sexual Related Disorder)
✓ பாலினம் தொடர்பான மனநோய்(Gender Related Disorder)
Reference: Diagnostic and Statistical Manual Of Mental Disorder- 5th Edition (DSM-5)
நன்றி.🖤
Iniyan Tharmaraj.,B.B.A.,MSW(Mpsw)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக