Translate

புதன், 30 மார்ச், 2022

What is Mental Health?

மனநலம் என்றால் என்ன?


        மனநலம் என்பது  நமது எண்ணம் (thought), நடத்தை(Behaviour)மற்றும் உணர்ச்சிகள்(Emotions) இதனை சார்ந்தது ஆகும். ஒரு மனிதன் எவ்வாறு சிந்திக்கிறான், எவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான் மற்றும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதே ஒரு மனிதனின் மனநலத்தை தீர்மானிக்கும்.மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை மனநலப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.நம் மனநலத்தில் பிரச்சனைகள் வருவது நம்முடைய அன்றாட வாழ்க்கையையும்,குடும்ப உறவுகளையும், மற்றும் உடல் நலத்தையும் பாதிக்கும்.

அ)எண்ணம் (Thought):
 Synapse:
  
நம் மூளையில் உள்ள நரம்புகளில் நியூரான்கள் என்ற நரம்பு செல் காணப்படும், இந்த நரம்பு செல்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாற்றம் செய்யும்.  இந்த நரம்பு செல்லில் நியூரோ டிரான்ஸ்மிட்டர் என்ற மூலக்கூறு காணப்படும், இந்த மூலக்கூறில் ஏதேனும் கோளாறுஏற்பட்டால் நமது எண்ணங்களில் பிரச்சனைகள் மற்றும் மாற்றங்கள் வரக்கூடும்.
உதாரணம்: 
1.கற்றல், நினைவாற்றல், உணர்தல்,சிக்கலைத் தீர்ப்பது,பேசும் முறை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
2. பொய்யான நம்பிக்கை (Delusions) மற்றும் பொய்யான உணர்வுகள் (Hallucinations) ஏற்படக்கூடும்.

ஆ) நடத்தை (Behaviour):
நடத்தை என்பது நாம் பிறந்ததிலிருந்து இந்த நொடி வரை நாம் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றியது. நம்முள் இருக்கும் நடத்தைகள் அனைத்துமே ஒருவரால் அல்லது ஒரு சூழ்நிலையால் நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. மனிதர்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் தீய பழக்கவழக்கங்கள் காணப்படும். நல்ல பழக்கங்கள் தீய பழக்கங்களாக மாறுவதற்கும் தீய பழக்கங்கள் நல்ல பழக்கங்களாக மாறுவதற்கும் காரணம் என்னவென்றால் நம் சூழ்நிலை மற்றும் நாம் சார்ந்து வாழ்ந்த ஒரு பொருள் அல்லது நபர் நம்மை விட்டு அல்லது நமக்கு கிடைக்காத சூழ்நிலையில் இருக்கும் பொழுது அதனை அடைவதற்கு நம் நடத்தைகள் மாற்றங்களை சந்திக்கும்.
உதாரணமாக:
1) மது அருந்துவது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது நம் நடத்தையில்(போதைப் பொருட்கள் வாங்குவதற்காக திருடுவது மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது) மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகிறது.

இ) உணர்ச்சிகள்(Emotions):
மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் உணர்ச்சிகள் நம் கைபேசியில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் காணப்படும் ஏமோஜிஸ் அனைத்தும் ஆகும். அவை நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். அதில் பிரதானமாக காணப்படும் உணர்ச்சிகள் கோபம்(anger), மனச்சோர்வு(depression), மனஇறுக்கம்(stress),சந்தோசம்(happiness),பயம்(fear),பதட்டம்(anxiety) ஆகும். மனித உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மூளையில் சுரக்கக்கூடிய இரசாயனங்கள்(Dopamine,Serotonin, 
Cortisol,Adrenaline,Melatonin)
 ஆகும். இந்த இரசாயனங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால் நம் உணர்ச்சிகளிலும்(Mood swing) ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
உதாரணமாக:
 ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (stress hormones)  என்று அழைக்க கூடிய செரட்டோனின், கார்டிசால்,அட்ரினலின் ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரக்கும்போது நம் உடம்பில் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும்,இதன் மூலம் நமக்குப் பயம்,பதட்டம்,கோபம் ஏற்படும்.


மேலே குறிப்பிட்டுள்ள எண்ணங்கள், நடத்தைகள்,உணர்ச்சிகள் இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது, இதில் ஏதேனும் ஒன்றில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதைத்தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் பிரச்சினைகள் உருவாக தொடங்கும்.
உதாரணமாக சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு காட்சியில் அவருடைய காதலி இறந்து விடுவார் அதனால் முதலில் அவர் உணர்ச்சிகளில் (Depression-மனச்சோர்வு) பிரச்சினைகள் உருவாகும் பின்பு சிறிது காலம் கழித்து போதைப் பொருட்களை (Behavioral problem-நடத்தைக் கோளாறு) எடுத்துக்கொள்ள தொடங்குவார். இது தொடர்ந்தால் அவருடைய எண்ணங்களிலும்(Delusions and Hallucinations) பிரச்சினைகள் சிறிது நாட்களில் தோன்றிவிடும்.

இதைப்பற்றி அடுத்த பதிவுகளில் விரிவாக காணலாம்..

நன்றி..
Iniyan Tharmaraj.B.B.A.,MSW(MPSW)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Mania.?

மேனியா (Mania):      மேனியா(Mania) அல்லது பித்து என்பது ஒருவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதீத ஆற்றல் உள்ளவராக உணர வைக்கும் ...