தூக்கம் என்றால் என்ன..? தூக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்களும்,விலங்குகளும் தனது உடல் மற்றும் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு இயல்பான நிலை ஆகும். நாம் தூங்குவதால் நம் மனதிலுள்ள இறுக்கங்கள் மற்றும் உடலிலுள்ள இறுக்கங்கள்யாவும் தளர்வடைகின்றன.சிறந்த தூக்கம் என்பது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய்களை தடுக்கவும் உதவுகிறது. ஒரு மனிதன் சராசரியாக 8 To 10 மணி நேரம் தூங்க வேண்டும்.போதுமான தூக்கம் இல்லாதபோது கவனக்குறைவு, தெளிவற்ற சிந்தனை,மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
தூக்கத்தின் வகைகள்:
# கண் அசைவு அல்லாத தூக்கம் {Non-Rapid Eye Movement (non-REM) Sleep}:
கண் அசைவு அல்லாத தூக்கம் என்பது ஒரு அமைதியான தூக்கம் என்பது ஆகும். இவ்வகையான தூக்கத்தில் நம் கண்கள் அசைவற்று காணப்படும். இவ்வகையான தூக்கம் மூன்று நிலைகளை கொண்டது.
அ) இலேசான தூக்கம் (NREM-1):
இந்த நிலை நாம் தூங்க தொடங்கிய நேரத்திலிருந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த நிலையில் நம் கண்களின் இயக்கம் மற்றும் தசைகளின் செயல்பாடு உட்பட அனைத்து குறையத் தொடங்குகின்றன.நாம் நிலை 1 தூக்கத்திலிருந்து எழுந்தால்,நாம் தூங்கவே இல்லை என்று நினைக்கத் தோன்றும்.சில சமயங்களில், நாம் விழ ஆரம்பித்து, திடீரென தசைச் சுருக்கத்தை அனுபவிப்பது போல் உணரலாம்.இந்த இயக்கம் ஹிப்னிக் ஜெர்க் எனப்படும்.
ஆ)உண்மையான தூக்கம்(NREM-2)
இந்த நிலையில் நம் கண் இயக்கம் நின்று, இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை மற்றும் மூளையின் மின் அலைகள் குறைய தொடங்கும்.
இந்நிலையானது 10 முதல் 25 நிமிடம் வரை நீடிக்கும். இந்நிலையில் நம் உடல் ஆழ்ந்த தூக்கத்திற்கு தயார் ஆகும்.
இ) ஆழ்ந்த தூக்கம் (NREM-3):
இது ஆழ்ந்த உறக்க நிலை ஆகும். இந்த கட்டத்தில் நம்மை எழுப்புவது கடினம், இருப்பினும் யாராவது நம்மை எழுப்பினால், சில நிமிடங்கள் சுயநினைவு இல்லாமல் இருப்போம். நம் கண் அசைவு மற்றும் தசைகளின் செயல்பாடுகள் இருக்காது.
கண் அசைவில்லா தூக்கத்தின் போது என்ன நடக்கும்?
✓ உடல் திசுக்களை சரிசெய்து மீண்டும் உருவாக்குகிறது.
✓ நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
✓ தசை மற்றும் எலும்புகளில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
✓ உடல் மற்றும் மனதினை தளர்வு
அடையச் செய்கிறது.
# விரைவான கண் அசைவுடைய தூக்கம் {Rabit Eye Movement (REM)Sleep}:
பொதுவாக, நாம் தூங்க தொடங்கிய 90 நிமிடங்களுக்குப் பிறகு கண் அசைவுடைய தூக்கம் (REM-Sleep) ஏற்படும்.இவ்வகையான தூக்கத்தின் முதல் பகுதி பத்து நிமிடம் நீடிக்கும் மற்றும் இதன் அடுத்த பகுதி ஒரு மணி நேரம் வரை கூட நீடிக்கலாம். நாம் REM தூக்கத்தில் நுழையும் போது, மூளை மற்றும் தசைகளின் செயல்பாடு மீண்டும் அதிகரிக்கும். இவ்வகை தூக்கமானது குழந்தைப் பருவத்தில் அதிகமாகவும், இளமை மற்றும் முதுமை பருவத்தில் குறைவாகவும் காணப்படும். இந்நிலையில் தான் நமக்கு அதிகப்படியான கனவுகள் வரும்.
கண் அசைவு உடைய தூக்கத்தின் போது என்ன நடக்கும்?
✓ கற்றலுக்கு உதவும் மூளையின் பகுதிகளைத் தூண்டுகிறது.
✓ புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
✓ வேகமான சுவாசம்.
✓ அதிகரித்த இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம்.
✓ ஆண்குறி விறைப்பு.
✓ விரைவான கண் இயக்கம்.
தூக்கமின்மைக்கான காரணங்கள்:
× போதை பழக்க வழக்கங்கள்,
× மிக அதிகமான அல்லது குறைவான வெப்பநிலை,
× மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம்,
× அதிகப்படியான கைபசி மற்றும் மடிக்கணினி பயன்பாடு,
× உடல்ரதியான பிணிகள்,
× அதிகப்படியான மனக்குழப்பம்,
× அதிகப்படியான டீ,காப்பி பயன்பாடு
× சில வகையான மருந்துகள்.
தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்:
× ஞாபக சக்தி மற்றும் கவனக்குறைவு,
× மன நோய்கள்
× அதிகப்படியான கோபம் மற்றும் மன அழுத்தம்,
× இன்சோம்னியா (Insomnia)
× இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்தல்.
× விபத்துகள்,
× இதய நோய் மற்றும் பக்கவாதம்,
× பாலியல் பிரச்சினைகள்,
× தூக்கமின்மை உங்கள் சருமத்தை வயதாக்குகிறது,
× உடல் பருமன்,
தூக்கமின்மைக்கான அறிகுறி:
× பகல் நேர சோர்வு அல்லது தூக்கம்,
× எரிச்சல், மனச்சோர்வு (ம) பதட்டம்,
× குறைந்த உந்துதல் (அ) ஆற்றல்
× மோசமான முயற்சி மற்றும் கவனம்,
× ஒருங்கிணைப்பு இல்லாமை
× தூக்கம் பற்றிய கவலை(அ)பதற்றம்,
× தூங்குவதற்கு மருந்து அல்லது மது பயன்படுத்துதல்,
× தலைவலி,
× பழகுவது, வேலை செய்வது (அ) படிப்பதில் சிரமம்,
× தொடர்ச்சியற்ற தூக்கம் (அ) தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுதல்.
தூக்கத்தின் நேரங்கள்:
¶ குழந்தைகள்- 16 மணி நேரம்
¶ மாணவர்கள்- 9 to 12 மணி நேரம்
¶ பெரியவர்கள்- 9 மணி நேரம்
செய்யக்கூடியவை:
• தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்,
• எழுதுதல் மற்றும் படித்தல்,
• உங்கள் அறையின் வெப்பநிலை
18 -21 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்,
• தியானம்,மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்,
• தூங்குவதற்கு முன்பு வெது வெதுப்பான நீரீல் குளிக்க வேண்டும்,
• அறையில் சிறு சிறு தாவரங்களை வளர்க்க வேண்டும்
• இதமான இசை கேட்பது,
• பாதங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்க வேண்டும்,
• கதைகள் கேட்பது,
செய்யக்கூடாதவை:
• குளிர்ச்சியான பாதங்களுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது,
• தூங்குவதற்கு முன்பு அதிக அளவு உணவு அருந்த கூடாது,
• தூங்குவதற்கு முன்பு புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்தக் கூடாது,
• பகல் நேரங்களில் 30 நிமிடத்திற்கு மேல் சிறுதுயில் கூடாது,
• படுக்கைக்கு அருகில் கைபேசியை சார்ஜ் செய்யக்கூடாது,
• தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்யக்கூடாது
• தூங்குவதற்கு முன்பு கைப்பேசி, மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்,
• மதிய நேரத்திற்கு பிறகு காபி குடிக்கக்கடாது.
குறிப்பு: மிகவும் அதிகப்படியான தூக்கம் அல்லது மிகவும் குறைவான தூக்கம் தொடர்ந்து இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
நன்றி.!🖤
By.Iniyan Tharmaraj,B.B.A.,MSW(MPSW)