Translate

சனி, 23 ஏப்ரல், 2022

Sleep..?

தூக்கம் என்றால் என்ன..?
      தூக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்களும்,விலங்குகளும் தனது உடல் மற்றும் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு இயல்பான  நிலை ஆகும். நாம் தூங்குவதால் நம் மனதிலுள்ள இறுக்கங்கள் மற்றும் உடலிலுள்ள இறுக்கங்கள்யாவும் தளர்வடைகின்றன.சிறந்த தூக்கம் என்பது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய்களை தடுக்கவும் உதவுகிறது. ஒரு மனிதன் சராசரியாக 8 To 10 மணி நேரம் தூங்க வேண்டும்.போதுமான தூக்கம் இல்லாதபோது கவனக்குறைவு, தெளிவற்ற சிந்தனை,மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

தூக்கத்தின் வகைகள்:
# கண் அசைவு அல்லாத தூக்கம் {Non-Rapid Eye Movement (non-REM) Sleep}:
   கண் அசைவு அல்லாத தூக்கம் என்பது ஒரு அமைதியான தூக்கம் என்பது ஆகும். இவ்வகையான தூக்கத்தில் நம் கண்கள் அசைவற்று காணப்படும். இவ்வகையான தூக்கம் மூன்று நிலைகளை கொண்டது.
அ) இலேசான தூக்கம் (NREM-1):
  இந்த நிலை நாம் தூங்க தொடங்கிய நேரத்திலிருந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த நிலையில் நம் கண்களின் இயக்கம் மற்றும் தசைகளின் செயல்பாடு உட்பட அனைத்து குறையத் தொடங்குகின்றன.நாம் நிலை 1 தூக்கத்திலிருந்து எழுந்தால்,நாம்  தூங்கவே இல்லை என்று நினைக்கத் தோன்றும்.சில சமயங்களில், நாம் விழ ஆரம்பித்து, திடீரென தசைச் சுருக்கத்தை அனுபவிப்பது போல் உணரலாம்.இந்த இயக்கம் ஹிப்னிக் ஜெர்க் எனப்படும்.
ஆ)உண்மையான தூக்கம்(NREM-2)
  இந்த நிலையில் நம் கண் இயக்கம் நின்று, இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை மற்றும் மூளையின் மின் அலைகள் குறைய தொடங்கும்.
இந்நிலையானது 10 முதல் 25 நிமிடம் வரை நீடிக்கும். இந்நிலையில் நம் உடல் ஆழ்ந்த தூக்கத்திற்கு தயார் ஆகும்.
இ) ஆழ்ந்த தூக்கம் (NREM-3):
  இது ஆழ்ந்த உறக்க நிலை ஆகும். இந்த கட்டத்தில் நம்மை எழுப்புவது கடினம், இருப்பினும் யாராவது நம்மை எழுப்பினால், சில நிமிடங்கள் சுயநினைவு இல்லாமல் இருப்போம். நம் கண் அசைவு மற்றும் தசைகளின் செயல்பாடுகள் இருக்காது.
கண் அசைவில்லா தூக்கத்தின் போது என்ன நடக்கும்?
   ✓ உடல் திசுக்களை சரிசெய்து மீண்டும் உருவாக்குகிறது.
   நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
    தசை மற்றும் எலும்புகளில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
   உடல் மற்றும் மனதினை தளர்வு 
அடையச் செய்கிறது.

# விரைவான கண் அசைவுடைய தூக்கம்  {Rabit Eye Movement (REM)Sleep}:
  பொதுவாக, நாம் தூங்க தொடங்கிய 90 நிமிடங்களுக்குப் பிறகு கண் அசைவுடைய தூக்கம் (REM-Sleep) ஏற்படும்.இவ்வகையான தூக்கத்தின் முதல் பகுதி பத்து நிமிடம் நீடிக்கும் மற்றும் இதன் அடுத்த பகுதி ஒரு மணி நேரம் வரை கூட நீடிக்கலாம். நாம் REM தூக்கத்தில் நுழையும் போது, ​​மூளை மற்றும் தசைகளின்  செயல்பாடு மீண்டும் அதிகரிக்கும். இவ்வகை தூக்கமானது குழந்தைப் பருவத்தில் அதிகமாகவும், இளமை மற்றும் முதுமை பருவத்தில் குறைவாகவும் காணப்படும். இந்நிலையில் தான் நமக்கு அதிகப்படியான கனவுகள் வரும்.
கண் அசைவு உடைய தூக்கத்தின் போது என்ன நடக்கும்?
  ✓ கற்றலுக்கு உதவும் மூளையின் பகுதிகளைத் தூண்டுகிறது.
  ✓ புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
  வேகமான சுவாசம்.
  அதிகரித்த இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம்.
  ஆண்குறி விறைப்பு.
  விரைவான கண் இயக்கம்.

தூக்கமின்மைக்கான காரணங்கள்:
× போதை பழக்க வழக்கங்கள்,
× மிக அதிகமான அல்லது குறைவான வெப்பநிலை,
× மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம்,
× அதிகப்படியான கைபசி மற்றும் மடிக்கணினி பயன்பாடு,
× உடல்ரதியான பிணிகள்,
× அதிகப்படியான மனக்குழப்பம்,
× அதிகப்படியான டீ,காப்பி பயன்பாடு
× சில வகையான மருந்துகள்.

தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்:
× ஞாபக சக்தி மற்றும் கவனக்குறைவு,  
× மன நோய்கள்
× அதிகப்படியான கோபம் மற்றும் மன அழுத்தம்,
× இன்சோம்னியா (Insomnia)
× இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்தல்.
× விபத்துகள்,
× இதய நோய் மற்றும் பக்கவாதம்,
× பாலியல் பிரச்சினைகள்,
× தூக்கமின்மை உங்கள் சருமத்தை வயதாக்குகிறது,
× உடல் பருமன்,

தூக்கமின்மைக்கான அறிகுறி:
× பகல் நேர சோர்வு அல்லது தூக்கம்,
× எரிச்சல், மனச்சோர்வு (ம) பதட்டம்,
× குறைந்த உந்துதல் (அ) ஆற்றல்
× மோசமான முயற்சி மற்றும் கவனம்,
× ஒருங்கிணைப்பு இல்லாமை
× தூக்கம் பற்றிய கவலை(அ)பதற்றம்,
× தூங்குவதற்கு மருந்து அல்லது மது பயன்படுத்துதல்,
× தலைவலி,
× பழகுவது, வேலை செய்வது (அ) படிப்பதில் சிரமம்,
× தொடர்ச்சியற்ற தூக்கம் (அ) தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுதல்.
தூக்கத்தின் நேரங்கள்:
குழந்தைகள்- 16 மணி நேரம்
மாணவர்கள்- 9 to 12 மணி நேரம்
பெரியவர்கள்- 9 மணி நேரம்

செய்யக்கூடியவை:
தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்,
எழுதுதல் மற்றும் படித்தல்,
உங்கள் அறையின் வெப்பநிலை
18 -21 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்,
தியானம்,மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்,
 தூங்குவதற்கு முன்பு வெது வெதுப்பான நீரீல் குளிக்க வேண்டும்,
அறையில் சிறு சிறு தாவரங்களை வளர்க்க வேண்டும்
 இதமான இசை கேட்பது,
 பாதங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்க வேண்டும்,
 கதைகள் கேட்பது,

செய்யக்கூடாதவை:
• குளிர்ச்சியான பாதங்களுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது,
 தூங்குவதற்கு முன்பு அதிக அளவு உணவு அருந்த கூடாது,
 தூங்குவதற்கு முன்பு புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்தக் கூடாது,
பகல் நேரங்களில் 30 நிமிடத்திற்கு மேல் சிறுதுயில் கூடாது,
படுக்கைக்கு அருகில் கைபேசியை சார்ஜ் செய்யக்கூடாது,
 தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்யக்கூடாது
தூங்குவதற்கு  முன்பு கைப்பேசி, மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்,
 மதிய நேரத்திற்கு பிறகு காபி குடிக்கக்கடாது.

குறிப்பு: மிகவும் அதிகப்படியான தூக்கம் அல்லது மிகவும் குறைவான தூக்கம் தொடர்ந்து இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நன்றி.!🖤
By.Iniyan Tharmaraj,B.B.A.,MSW(MPSW)

புதன், 6 ஏப்ரல், 2022

Types Of Mental Illness.?

மனநோயின் வகைகள்:

அமெரிக்க மனநலசங்கத்தின் மனநலக் கோளாறைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு (Diagnostic and statistical Manual of Mental Disorder- DSM) பலவிதமான மனநோய்களை வகைப்படுத்தியுள்ளது.
அவற்றில் மிகவும் பொதுவான சில மனநோய்களை இங்கே காணலாம்.

✓மனநிலை கோளாறு [Mood Disorder]:

             மனநிலைக் கோளாறு என்பது ஒரு மனநலப் பிரச்சினையாகும், இது முதன்மையாக ஒரு நபரின் உணர்ச்சி நிலையை பாதிக்கிறது(Emotions). இந்நோயானது ஒரு நபர் நீண்ட கால அதீத மகிழ்ச்சி, அதீத சோகம் அல்லது இரண்டையும் அனுபவிக்கும் ஒரு கோளாறு ஆகும்.சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவரின் மனநிலை மாறுவது இயல்பானது ஆனால் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் பல வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருக்குமேயானால் அவை மனநிலை கோளாறாக(Mood Disorder) இருக்க வாய்ப்பு உண்டு.
எ.கா:
       # இருமுனை மனநிலை கோளாறு(Bipolar Mood Disorder)
       # மனச்சோர்வு நோய் (Depression)
       # மன எழுச்சி நோய் ( Mania)

✓ மனப்பதற்ற நோய்[Anxiety Disorder]:

        ஒருவருக்கு பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு சூழ்நிலையில் உடலும்,மூளையும் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினையை ஏற்படுத்தும் அதுவே மனப்பதற்றம் ஆகும்.மனதில் சிறிதளவு பயம் கலந்த பதற்றம் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நோயாக மாறிவிடுகிறது.இந்தியாவில் புள்ளி விவரங்களின்படி 5 முதல் 7  சதவிகிதம் பேருக்கு மனப் பதற்றம் இருக்கிறது.
எ.கா:
        # சமூக பதற்றக் கோளாறு(Social Anxiety)
        # பயநோய்(Phobia)
        # பீதி நோய்(Panic Disorder)
        # பொதுவான பதற்றக் கோளாறு(Generalized anxiety disorder)

✓மனநோய் கோளாறு[Psychotic Disorder]:

               மனநோய் என்பது மனதைப் பாதிக்கும் தீவிர நோய்களின் ஒரு குழுவாகும். இந்நோயானது ஒருவருக்கு தெளிவாகச் சிந்திபதிலும், நல்ல முடிவுகளை எடுப்பதிலும்,உணர்ச்சிப்பூர்வமாக பதிலளிப்பதிலும், திறம்பட தொடர்பு கொள்வதிலும்,யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதிலும், சரியான முறையில் நடந்துகொள்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எ.கா:
       # மனச்சிதைவு நோய் (schizophrenia)
       # ஸ்கிசோ பாதிப்பு நோய்(Schizo -affective disorder)
       # மருட்சி கோளாறு(Delusional Disorder)

✓ உண்ணுதல் கோளாறு [Eating Disorder]:

                      இந்நோயானது உணவு உண்ணுதல் அல்லது உண்ணுதல் தொடர்பான நடத்தையின் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் அல்லது இடையூறுகளால் வகை படுத்தப்படுகிறது.இவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்கும் உளவியல் நிலைகளின் வரம்பாகும். இதன் விளைவாக உணவு உட்கொள்ளல் அல்லது அருந்துவதில் மாற்றம் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் அல்லது உளவியல் செயல்பாடுகள் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
எ.கா:
      # பசியற்ற உளநோய்(Anorexia nervosa)
      # புலிமியா உளநோய்(Bulimia nervosa)
      # மிதமிஞ்சி உண்ணும் நோய்(Binge eating disorder)

✓ சோமாடிக் கோளாறு தொடர்பான நோய்கள் [somatic related disorder]:

              சோமாடிக் நோய் என்பது தனக்கு இல்லாத ஒரு உடல் ரீதியான பிணியை இருப்பதாக நினைத்து வருந்துவது ஆகும். இந்நோயானது பதற்ற நோயுடன் தொடர்புடையது. மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வலியை சார்ந்தோ, நரம்பு கோளாறுகளை சார்ந்தோ,பாலியல் பிரச்சினைகளை சார்ந்தோ அல்லது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சார்ந்தோ காணப்படும்.
எ.கா:
      # நோய் கவலைக் கோளாறு(Illness anxiety disorder)
      # மாற்றுக் கோளாறு(Conversion disorder)

✓ ஆளுமை கோளாறு[Personality Disorder]:

         ஆளுமைக் கோளாறுகள் மனநல நிலைமைகளின் ஒரு குழுவாகும், அவை வளைந்துகொடுக்காத மற்றும் வித்தியாசமான சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.இந்த உள் அனுபவங்கள் மற்றும் நடத்தைகள் பெரும்பாலும் ஒருவர் வாழும் கலாச்சாரத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றது.உங்களுக்கு ஆளுமை கோளாறு இருந்தால், மற்றவர்களுடன் பேசுவதிலும், பழகுவதிலும் சிரமம் ஏற்படலாம். ஆளுமை கோளாறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
எ.கா:
Cluster A: suspicious
  1) சித்தப்பிரமை ஆளுமை கோளாறு(Paranoid personality disorder)
  2) ஸ்கிசாய்டு ஆளுமை கோளாறு(Schizoid personality disorder)
  3) ஸ்கிசோடிபால் ஆளுமை கோளாறு(Schizotypal personality disorder)
Cluster B: Emotional & Impulsive
  4) சமூக விரோத ஆளுமைக் கோளாறு(Antisocial personality disorder)
  5) விளிம்புநிலை ஆளுமை கோளாறு ( Borderline personality disorder)
  6) நடிப்புத் திறன் ஆளுமை கோளாறு(Histrionic personality disorder)
  7) நாசீசிஸ ஆளுமை கோளாறு (Narcissistic personality disorder)
Cluster C: Anxious
  8) தவிர்க்கும் ஆளுமை கோளாறு(Avoidant personality disorder)
  9) சார்பு ஆளுமை கோளாறு (Dependent personality Disorder)
 10) அப்செஸிவ்-கம்பல்சிவ் ஆளுமைக் கோளாறு (Obsessive compulsive personality Disorder)

✓ உணர்ச்சி வேக கட்டுப்பாடு மற்றும் அடிமையாதல் சம்மந்தப்பட்ட மனநோய் [Impulse control and addiction related Disorder]:
      
              உணர்ச்சி வேகக்கட்டுப்பாட்டு கோளாறு என்பது ஒரு நபருக்கு உணர்ச்சிகள் அல்லது நடத்தைகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சிக்கலான நிலை ஆகும். உதாரணமாக திருடுவது,சூதாடுவது மற்றும் மற்ற நபர்களிடம் கோபம் கொள்வது போன்ற பழக்கங்களை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அதனை செய்வது.
எ.கா:
     # க்ளெப்டோமேனியா (Kleptomania)
     # பைரோமேனியா(Pyromania)
     # போதைக்கு அடிமையாதல் (Addiction to Drugs)

✓ தூக்கக் கோளாறு [Sleeping Disorder]:

                தூக்கக் கோளாறு என்பது ஒரு வழக்கமான அடிப்படையில் அல்லது நன்றாக தூங்கும் திறனை பாதிக்கும் ஒரு நோயாகும். தூக்கத்தில் ஏற்படும் கோளாறுகள் நம் உடல்நல குறைவடையும், அதிகப்படியான மன அழுத்தத்தையும் கொடுக்கும்.
எ.கா:
      # தூக்கமின்மை (Insomnia)
      # பராசோம்னியாஸ்(Parasomnias)
      # நார்கோலெப்ஸி(Narcolepsy)

✓ நரம்பியல் வளர்ச்சி திறன் குறைபாடு[Neuro Developmental Disorder]:

                 நரம்பியல் வளர்ச்சி திறன் குறைபாடு என்பது மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் கோளாறுகளின் ஒரு குழுவாகும், இந்நோய் ஆனது மூளையின் செயல்பாடு,உணர்ச்சி, கற்றல்திறன், சுயகட்டுப்பாடு மற்றும் நினைவாற்றல் போன்றவற்றில் குறைபாடுகளை ஏற்படுத்தும். நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளின் விளைவுகள் ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
எ.கா:
      # கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (Attention deficit hyperactivity disorder)
     # கற்றல் குறைபாடு ( learning Disability)
     # அறிவுசார் குறைபாடுகள்(Intellectual disabilities)

✓அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் தொடர்பான கோளாறுகள்[ Trauma and stress Related Disorder]:

            அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் தொடர்பான கோளாறுகள் என்பது குழந்தை பருவத்தில் நாம் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படக்கூடிய உணர்ச்சி மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சனைகளின் ஒரு குழுவாகும்.பெரும்பாலும்  குடும்ப மோதல்கள், பெற்றோர்களால் கைவிடப்படுவது,உடல் ரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியான வன்கொடுமைகள் போன்ற சம்பவங்களே இந்நோய் வருவதற்கு காரணமாகிறது.
எ.கா:
      # அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தக் குறைபாடு (Post-traumatic stress disorder)
      # கடுமையான மன அழுத்தக் கோளாறு(Acute stress disorder)
      # எதிர்வினை இணைப்பு கோளாறு(Reactive attachment disorder)

✓ அப்செசிவ்-கம்பல்சிவ் தொடர்பான கோளாறு [Obsessive-Compulsive Related Disorder]:
                    அப்செசிவ்-கம்பல்சிவ் தொடர்பான கோளாறு என்பது ஒரு மனநோயாகும்.இது மீண்டும் மீண்டும் தேவையற்ற எண்ணங்கள் அல்லது உணர்வுகளை (Obsession) அல்லது மீண்டும் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை (Compulsive) ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு விஷயத்தை தொடர்ந்து சரி பார்த்துக் கொண்டே இருப்பது மற்றும் திரும்பத் திரும்ப ஒரே செயலை செய்வதுமாக இருப்பார்கள்.
எ.கா:
      # அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு (obsessive compulsive disorder)
      # உடல் டிஸ்மார்பிக் கோளாறு (Body dysmorphic disorder)
      # டிரிகோட்டிலோமேனியா
(trichotillomania)


இதர மனநோயின் வகைகள்:
‌✓ விலகல் நோய்( Dissociative disorder)
✓ நீக்குதல் கோளாறு (Elimination Disorder)
✓ பாலியல் தொடர்பான மனநோய்.
(Sexual Related Disorder)
✓ பாலினம் தொடர்பான மனநோய்(Gender Related Disorder)

Reference: Diagnostic and Statistical Manual Of Mental Disorder- 5th Edition (DSM-5)

நன்றி.🖤
Iniyan Tharmaraj.,B.B.A.,MSW(Mpsw)

சனி, 2 ஏப்ரல், 2022

What is Mental illness?


மனநோய் என்றால் என்ன..?
         மனநோய் என்பது நம்முடைய எண்ணம்(Cognition), நடத்தை(Behavior) மற்றும் உணர்ச்சிகளில்(Emotions) ஏற்படும் மாற்றங்களும், பாதிப்புகளும் மனநோய் ஆகும். இப்பாதிப்புகள் சில நாட்களோ அல்லது பல நாட்களோ தொடரலாம்.

மனநோய்க்கான காரணங்கள்:
ரபணுக்கள் (Genetic)- மனநோய் என்பது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணு மூலமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.
✓சுற்றுச்சூழல் (Environment)- மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழ்வதால் மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
✓ மூளை வேதியியல் (Brain Chemistry)- மூளையில் சுரக்கக்கூடிய இரசாயனங்களின் ஏற்றத்தாழ்வு மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓ போதைப் பொருட்கள் (Substance Abuse)-மது அருந்துவது அல்லது மற்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவது மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்(Traumatic Events)-நேசிப்பவரை இழப்பது அல்லது கார் விபத்தில் சிக்குவது போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓ மூளை தொற்று அல்லது காயம்(Brain Infection or injury)-மூளையில் ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகள் மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓ உடல்நலக்குறைவு (Physical illness)-தீவிர உடல்நலக் குறைவு நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும்.
✓ஆரோக்கியமற்ற பழக்கங்கள்(unhealthy habits)- போதுமான அளவு தூங்காமல் இருப்பது,தனிமையில் வாழ்வது மற்றும் யாரிடமும் வெளிப்படையாக பேசாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் மனநோய்க்கு வழிவகுக்கும்.
✓எதிர்மறை எண்ணங்கள்(Negative thoughts)-தாழ்வு மனப்பான்மை மற்றும் தவறான எதிர்பார்ப்புகள் உங்களுக்கு பதட்டத்தையும், சோகத்தையும் உண்டாக்கக் கூடும்

பொதுவான அறிகுறிகள்:
✓ தூக்கமின்மை மற்றும் பசியின்மை.(Sleeplessness and loss of appetite)
உணர்ச்சிகளில் விரைவான அல்லது வியக்கத்தகு மாற்றங்கள்.(Mood Swings)
 சமுதாயத்தில் இருந்து விலகிச்செல்வது மற்றும் ஆர்வமின்மை (Social withdrawal and interest-less)
✓ அமைதியின்மை மற்றும் அலைந்து திரியும் போக்கு( Restlessness and Wandering tendency)
சுகாதாரமற்ற நிலை (Poor personal hygiene)
✓ வழக்கத்தை விட நீண்ட நேரம் நீடிக்கும் சோகம் அல்லது வெறித்தனம்.(Unusual depression and Anger)
தெளிவற்ற பேச்சு மற்றும் அர்த்தம் அல்லது பொருள் இல்லாத பேச்சு (Irrelevant and disorganized speech).
தனிமை (loneliness)
தற்கொலை எண்ணம் (suicide thoughts)
தீவிர அறிகுறிகள்:
அதிகப்படியான சந்தேகம் (Suspected thoughts)
தனியாக பேசுவது மற்றும் சிரிப்பது (self talk and self smile)
காதில் மாயக்குரல் கேட்பது (Auditory hallucination)
கண்களில் மாய உருவம் தெரிவது (Visual hallucinations)
உடம்பின் மேல் பூச்சி,பூரான் ஊருவது போல் நினைப்பது (Tactile hallucination)
எனக்கு துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவது (Olfactory hallucination)
ஏதோ வாயில் சுவை இருந்து கொண்டே இருக்கிறது என்று நினைப்பது (Gustatory Hallucination)
தன்னை யாரோ பின் தொடர்வதாக மற்றும் என்னை பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று நினைப்பது (Delusion of reference)
அனைவரும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று நினைப்பது (Delusion of persecution)
நான் கடவுள் என்று கூறுவது (Delusion of grandiose)
எனக்குள் கடவுள் இருக்கிறார் என்று கூறுவது (Delusion of possession by god)
தன்னிச்சையான பேச்சு (Spontaneous speech)
என்னைப்பற்றி டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்கள் என்று கூறுவது (Delusion of thought broadcasting)
என்னை யாரோ கட்டுப்படுத்துகிறார்கள் என்று நினைப்பது (Delusion of control)
என் உடல் உறுப்புகள் அழுகிவிட்டது அல்லது இல்லை என்று கூறுவது (Cotard delusion)
அதிகப்படியான பயம் மற்றும் பதட்டம் ( Irrational fear and anxiety)

சிகிச்சைகள்:
மருந்தியல் சிகிச்சை(Pharmacological treatment)
மனநல ஆலோசனைகள் (Psychological counseling)
உளவியல் சிகிச்சை (Psychotherapy)
யோகா மற்றும் தியானம் (Yoga and Meditation)
மின் அதிர்வு சிகிச்சை (Electro-convulsive therapy)

மன நோய்க்கான சிகிச்சைகள் பெரும்பாலும் நோயின் தன்மையைப் பொறுத்தே அமையும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்கள் குடும்பத்தினருக்கு இருந்தால் அவரை அருகில் உள்ள மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். ஏனெனில் மனநோய் சிறியதாக இருக்கும்போதே அதனை சரி செய்து விட வேண்டும் இல்லையென்றால் அது நாள்பட்ட நோயாக மாறி அதனை சரிசெய்ய மிகவும் கடினமாகிவிடும்.So plz Consult a psychiatrist in case whose symptoms are present.

நன்றி.🖤
Iniyan Tharmaraj B.B.A.,MSW(MPSW)

Mania.?

மேனியா (Mania):      மேனியா(Mania) அல்லது பித்து என்பது ஒருவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதீத ஆற்றல் உள்ளவராக உணர வைக்கும் ...