Translate

புதன், 7 செப்டம்பர், 2022

Mania.?

மேனியா (Mania):
     மேனியா(Mania) அல்லது பித்து என்பது ஒருவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதீத ஆற்றல் உள்ளவராக உணர வைக்கும் ஒரு நிலையாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதீத உற்சாகத்துடனும், அதீத வேகத்துடனும் காணப்படுவார்கள். இந்நோயானது ஒருவரின் உணர்ச்சி, நடத்தை மற்றும் எண்ணம் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தும்.மேலும் இந்நோய் இருதுருவ மனநோயின் (Bipolar disorder) ஒரு துருவம் ஆகும்.

அறிகுறிகள்:
தூக்கமின்மை (sleeplessness),
• அதீத மற்றும் திடீர் கோபம் (sudden irritability and anger),
அலைந்து திரியும் போக்கு (Restlessness and wandering tendency),
• தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளுதல் (Delusion of Grandiosity) 
 Ex: நான் கடவுள், நான் விஞ்ஞானி, CM and PM நான் சொல்றத கேப்பாங்க.
• தன்னிச்சையான பேச்சு (spontaneous talk),
மற்றவர்கள் தன்னை கவனிப்பதாக உணர்தல் (Delusion of Reference),
• மற்றவர்கள் தனக்குத் தீங்கு விளைவிப்பதாக உணர்தல் (Delusion Of Persecution),
• அதீத கடவுள் நம்பிக்கை ( increased God beliefs)
தனக்குள் கடவுள் இருக்கிறார் என்று கூறுதல் ( Possession By God),
மற்றவர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயப்படுத்துதல் (Physical and verbal abuse)
மாற்றி மாற்றி பேசுதல்(Flight of ideas),
அதீத சத்தத்துடன் கூடிய பேச்சு(Shouting Behavior),
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது,
அதீத பாலியல் செயல்பாடுகள் (Hyper-sexuality)
அதீத ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல்,
தேவையில்லாத செலவுகள் செய்வது மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குதல் (Spending Money for Unnecessary)
சாதாரண நேரங்களில் கூட நேர்காணலுக்கு செல்வது போல் உடை அணிதல்,
கவனச்சிதறல் (Destructibility).
தோள்பட்டையை உயர்த்திக் கட்டிக் கொள்ளுதல்.

காரணங்கள்:
மரபணு (Genetic),
சுற்றுச்சூழல் நிலை (Environment),
  திடீர் வாழ்க்கை முறை மாற்றம் (Divorce and Jobless),
 போதைப் பொருள் பயன்பாடு
 (substance use),
 மூளை காயங்கள் (Brain injury)
• மனச்சோர்வுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் (Antidepressants),
• குறைவான தூக்கம்.

சிகிச்சைகள்:
• மருந்து மற்றும் மாத்திரைகள் (Medication),
எலக்ட்ரோகான்வல்சிவ் சிகிச்சை(ECT),
உளவியல் சிகிச்சை(Psycho Therapy)
• ஆதரவு குழுக்கள்( Supportive Groups).
தியானம் & யோகா பயிற்சி
 (Meditation). 

Do and Don't:
https://sayyes2life.in/d/4363

Reference: DSM-5

நன்றி....🖤
By..Iniyan Dharmaraj.BBA.,MSW(Mpsw)

Mania.?

மேனியா (Mania):      மேனியா(Mania) அல்லது பித்து என்பது ஒருவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதீத ஆற்றல் உள்ளவராக உணர வைக்கும் ...